×

சேதமடைந்து காணப்படும் முரட்டு வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, டிச. 25: சேத்தியாத்தோப்பு அருகே குறுக்கு ரோடு பகுதியில் சென்னை-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது முரட்டு வாய்க்கால். இந்த கிளைவாய்க்கால் பாலமானது சேதமடைந்தும், விரிசல் விட்டும் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முரட்டு வாய்க்கால் இணைப்பு பாலம் வலுவிழ்ந்து சேதமாகி உள்ளது. இந்த வாய்க்காலின் வழியாக தான் மிராளூர், மஞ்சக்கொல்லை, உடையூர், சீயப்பாடி போன்ற கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.  இந்நிலையில் முரட்டு வாய்க்கால் பாலமானது மிகவும் வலுவிழந்தும், சேதமடைந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. வடக்கு வெள்ள ராஜன் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்காலாக முரட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த முரட்டு வாய்க்கால் பாலத்தின் வழியாக தினந்தோறும் மூன்று மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன.

பாலத்தின் மேலே உள்ள சாலை உள்வாங்கினால் மூன்று மாவட்டங்களின் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, சேத்தியாத்தோப்பில் இருந்து கரைமேடு கிராமம் வரை உள்ள கிளை வாய்க்கால்களின் பாலத்தையும், ஷட்டர்களையும் பார்வையிட்டு பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drain bridge ,
× RELATED நெல்லை – தென்காசி சாலையில்...