×

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

பட்டிவீரன்பட்டி, டிச. 25: பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தடையை மீறி பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகில் அய்யம்பாளையம், சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, நெல்லூர், சாலைப்புதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தடை செய்யப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டு விசேஷங்கள், திருவிழாக்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளையொட்டி கிராமப்புறங்களில் உள்ள மின்கம்பங்கள், மேல்நிலைகுடிநீர் தொட்டிகள், டெலிபோன் கம்பங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை கட்டி, அளவிற்கு அதிகமாக சத்தத்துடன் பாடல்களை ஒளிபரப்புகின்றனர்.

இதனால் நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தேர்வு நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும், போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி, கூம்புவடிவ ஒலிபெருக்கிகளின் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Balakrishnan ,CPM ,talks ,
× RELATED வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி