×

எட்டயபுரம் அருகே கான்ட்ராக்டரை தாக்கி பைக் கடத்தல்

எட்டயபுரம், டிச. 24: எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச்  சேர்ந்த வேலுச்சாமி மகன் ராஜ்குமார். கோவில்பட்டி, சாத்தூர்,  எட்டயபுரத்தில் பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். நேற்று  முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்  கொண்டிருந்தார். எட்டயபுரம் அருகே குமாரகிரிபுதூர் விலக்கு அருகே  சென்றபோது, ஸ்கூட்டியில் வந்த 3 மர்ம நபர்கள், ராஜ்குமாரை தாக்கி அவரது  செல்போனை பறித்தனர். தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.40 ஆயிரத்தை  அவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக பைக்கே அங்கேயே விட்டுவிட்டு அங்குள்ள  சோளக் கொல்லைக்குள் அவர் ஓடினார். உடனே அந்த பைக்கை அந்த 3 மர்ம நபர்கள்  கோவில்பட்டிக்கு ஓட்டிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எட்டயபுரம் போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். தொடர் வழிப்பறி:  கடந்த  சில வாரங்களுக்கு முன்னர் எம். கோட்டூர் விலக்கு அருகே 2 மர்ம நபர்கள்  ஆசிரியையை வழிமறித்து செயினை பறித்துச் சென்றனர். இதே போல் கோவில்பட்டியைச்  சேர்ந்த வியாபாரியை வழிமறித்து ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர்.  இவ்வாறு இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி சம்பவங்களை அடியோடு  நிறுத்த ரோந்து பணியை போலீசார் மேலும் தீவிரப்படுத்த முன்வர வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : contractor ,Ettiyapuram ,
× RELATED பள்ளிவிளை மத்திய சேமிப்பு குடோன் ஒப்பந்தகாரருக்கு ₹1 கோடி பாக்கி