×

கன்னியப்பிள்ளைபட்டி ஆரம்ப பள்ளியில் கட்டிடம் சேதம் விபத்துக்கு முன் சீரமைக்கப்படுமா?

தேனி, டிச.24: ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டியில் ஆரம்ப பள்ளியின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து அவ்வப்போது பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் மேற்கூரையின் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. இதனை சரிசெய்யாமல் தற்போது பள்ளிச் சுவர்களில் வண்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கூரை பெயர்ந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிச்சுவருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

சமீபத்தில் மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டியில் மேற்கூரை பெயர்ந்து விழுவதை மறைத்து அதன்மீது

Tags : building ,accident ,Kanniya Pillaipatti Primary School ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...