×

திருத்தணி தாமரை குளம் தாமரைக்குளம் உபரிநீர் செல்ல கான்கிரிட் வடிகால் அமைக்க வேண்டும்

திருத்தணி, டிச. 24: திருத்தணி - திருப்பதி சாலையில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி பி.எம்.எஸ்.நகர், பை-பாஸ் சாலை, கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த குளம் தற்போது பெய்த மழையில் நிரம்பியது. மேலும், குளத்தில் இருந்து வெளியேறி நந்தி ஆற்றில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், உபரி நீர் வௌியேற வழியின்றி சுற்றுப்பு குடியிருப்பில் தேங்கியது. இந்த நீர் பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசியது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் அப்பகுதிமக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.  

இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி, கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதிரடியாக திருத்தணி தாமரைக் குளத்தில் இருந்து நந்தி ஆற்றுக்கு செல்லும் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதற்காக அந்த கால்வாய் பகுதி தூர்வாரப்பட்டு, தண்ணீர்  வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் அந்த கால்வாயின் இரண்டு புறங்களிலும் கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது அந்த கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி, பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் கடைகள், வீடுகளுக்கு சென்று வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக அந்த பகுதியில் கான்கிரீட்டிலான வடிகால் கால்வாய் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thiruthani Lotus Tank ,Lotus Tank ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை