×

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்திய கம்யூ. தடை மீறி ஆர்ப்பாட்டம், மறியல்

திருச்சி, டிச.24: ரங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தடைமீறி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். அண்டை நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும்.

இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சியினர் அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் திராவிடமணி, ஏஐடியூசி மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Demonstration ,breach ,
× RELATED விவசாயிகளுக்கு உரக்கட்டு செயல்விளக்க பயிற்சி