×

ஆர்டிஓ ஆய்வு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர், 42 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

முத்துப்பேட்டை, டிச.24: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் வரும் 27ம்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 2மாவட்ட கவுன்சிலர்கள், 15ஒன்றிய கவுன்சிலர்கள், 29ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் 29ஊராட்சி மன்றத்திற்கு உள்ள உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட கவுன்சிலருக்கு 8பேர் ஒன்றிய கவுன்சிலருக்கு 81பேர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 135பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 575பேர் என ஒன்றியத்தில் இந்த உள்ளாட்சி தேர்தலில் 799பேர் போட்டியிட்டு தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் கீழபெருமழை ஊராட்சி மன்ற தலைவராக முருகானந்தம் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யபட்டார். அதேபோல் ஒன்றியத்தில் 2ஊராட்சியில் அனைத்து வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலநம்மங்குறிச்சி, மேலபெருமழை ஆகிய இரண்டு ஊராட்சியிலும் இருக்கும் தலா 6வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் எடையூர்;1உறுப்பினர் ஆரியலூர்;-1, இடும்பாவனம்-1, ஜாம்புவானோடை-2, கள்ளிக்குடி-1, கற்பகநாதற்குளம்-3, குன்னலூர்-1, மாங்குடி-2, தம்பிக்கோட்டை-1, வடசங்கேந்தி-2, மருதவனம்-2, கோவிலூர்-2, உப்பூர்-3, உதயமார்த்தாண்டபுரம்-1, தில்லைவிளாகம்-1, தோலி-2, தொண்டியக்காடு-5 ஆகிய 42வார்டு உறுப்பினர்களாகும். அதேபோல் பின்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒன்றியத்தில் அதிகபடியாக 11பேர் போட்டியிடுகின்றனர். இதில் சுப்பையன், ராஜேந்திரன், வரதராஜன், தனிக்கொடி, கணபதி, மதிவாணன், கமலக்கண்ணன், சுப்பிரமணியன், பூமிநாதன், அருணகிரி, செந்தில்குமார் ஆகிய 11பேர் இந்த பின்னத்தூர் ஊராட்சியில் தலைவருக்கு போட்டியிடுகின்றனர்.

Tags : Panchayat Board ,RTO Study Muttupettu Union ,ward members ,
× RELATED மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகளில்...