×

புதுநடுவலூர் அத்தி அருவியில் உற்சாகமாக குளிக்கும் இளைஞர்கள்

பெரம்பலூர்,டிச.24: பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கன வே 7அருவிகள் கொட்டிவ ரும்நிலையில் 8வதாக புது நடுவலூரில் அத்திஅருவியில் தண்ணீர் வருவதால் இளைஞர்கள் படையெடுக்கின்றனர்.. மாநிலத்தின் மையத்திலி ருக்கும் பெரம்பலூர் மாவட் டம், மானாவாரி சாகுபடி யை நம்பியுள்ள வறண்ட பூமியாகும். இந்தியாவின் வடக்கு எல்லையாக இமய மலை இருப்பது போல், பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகத் திகழும் பச்சைமலைத் தொட ர்ச்சி, பசுமையைப் போர்த் தியபடி, திருச்சி,சேலம், பெரம்பலூர் மாவட்டங்களை பசுமையால் இணைக்கும் பாலமாக உள்ளது. 300 மீட்டர் உயரத்திற்குமேல் முகடுகளாகக் காணப்படும் இ வற்றில் பல்வேறு மூலிகைகள் விளைகின்றன. இங்கிருந்துதான் கொட்டுகின்ற அருவிகளும் பிறக்கின்றன.

இதில் சுற்றுலாத்தல அந்த ஸ்து கொண்டது லாடபுரம் மயிலூற்று அருவி மட்டு மே. ஆர்ப்பரித்துக் கொட்டு வதற்கு மலையாளப்பட்டி எட்டெருமைப்பாழி அருவி, கோரையாறு அருகேயுள்ள கோரையாறு அருவி, பூலா ம்பாடி அருகேயுள்ள இரட் டைப் புறா அருவி, பளை யம் அருகேவுள்ள மாடத்து வாரிஅருவி, லாடபுரம் மயி லூற்று அருவிக்கு சற்று அருகேயுள்ள ஆணைக்க ட்டி அருவி, கொட்டாரக்கு ன்று அருகே அறுபத்தி பெ ருமாள்கோவில் அருவியெ ன கடந்த நவம்பர்மாத இறு தியில் தொடங்கி, டிசம்பர் மாதத் தொடக்கம் வரை பச்சைமலைமீது பெய்த கனமழை காரணமாக ஏற் கனவே 7அருவிகளில் தண்ணீர் கொட்டத்தொடங்கின.

இந்திலையில் 8வது அரு வியாக புதுநடுவலூர் அரு கே உள்ள பச்சை மலைத் தொடர்ச்சியில், கடந்த 2 வாரங்களாக அத்தி அருவி யிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. இது ஆரம்பத்தில் உள்ளூர் வாசிகளுக்கே தெரியாமல் இருந்தது. தற்போது அத்தி அருவியில் தண்ணீர் வருவதை அறிந்து இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். புதுநடுவலூர் கிராம த்திலிருந்து வெகு அருகி லுள்ள பச்சைமலைத் தொ டர்ச்சியில் பாறைகளின் வழியாக அத்திஅருவிக்கு தண்ணீர் வருவதாக அற்புதமாக இருக்கிறது.

Tags :
× RELATED அரியலூர் மாவட்டத்தில் வேளாண்...