×

நாகை அடுத்த கீழ்வேளூர் பகுதியில் புகையான் நோய் தாக்குதலுக்கு 5,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்

நாகை, டிச.24: கீழ்வேளூர் பகுதியில் சம்பா நெற்பயிரில் புகையான் நோய் அதிகளவில் தாக்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் நிலத்தடி நீர் இல்லாததால் விவசாயிகள் மேட்டூர் அணை தண்ணீரையே நம்பி நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மேட்டூர் அணை தண்ணீர் காலத்தில் திறக்காதாலும், போதிய தண்ணீர் இல்லாததாலும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து, மழையால் நெல் விதைகள் முளைத்து 20 நாள் இளம் பயிரில் தண்ணீர் வைத்து களை எடுத்தல், உரம் இடும் பணியை தொடங்குவார்கள். இந்த ஆண்டு மேட்டூர் அணை காலதாமதமாக ஆகஸ்ட் 13ம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் இந்த ஆண்டு சுமார் 85 சதவித நிலப்பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான விவசாயிகள் நெல் ரகங்களில் நீண்ட கால ரகமான சி.ஆர்.1009, மத்திய கால ரகமான பி.பி.டி. என்ற பாப்பட்லா, என்.எல்.ஆர், டி.கே.எம்.13, கோ.51, ஏ.எஸ்.டி.16, 9408 போன்ற நெல் ரகங்கள் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. 2018 நவம்பர் மாதம் 16ம் தேதி கஜா புயலின் போது பெய்த மழையை அடுத்து 8 மாதம் கழித்து பெய்த மழையை கொண்டு கோடை உழவு செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் இறுதியில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து முடித்த ஒரு சில நாட்களில் செப்டம்பர் தொடக்கத்தில் பெய்த மழையால் நெல் விதைகள் முளைத்தது. தற்போது நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்கள் முளைத்து 110 நாள் பயிராக உள்ளது. தற்போது அந்த பயிர்கள் கதிர் வெளி வந்தும், தண்டு உருளும் நிலையிலும், தொண்டை கதிர் பக்குவத்திலும் உள்ளது.

பொதுவாக கோடை காலத்தில் கோடை உழவு செய்து பின்னர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் நடவு அல்லது நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு ஜனவரி, பிப்பரவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும். நெல் அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன் கோடை சாகுபடியாக விதை மற்றும் விதைப்பு செலவை தவிர வேறு செலவு இல்லாத பணப்பயிராக உள்ள உளுந்து, பச்சை பயிறு வகை பயிர்கள் விதைக்கப்படும். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு காலத்தில் மழை பெய்து விதை முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சீரான மழை பெய்ததால் பயிர்கள் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிந்தது. இந்நிலையில் அதிக களைகள் மற்றும் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் போன்றவற்றால் விவசாயிகளுக்கு அதிக செலவானது. இந்நிலையில் விவசாயிகள் பயிரை அதிக செலவு செய்து களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரம் இடுதல் போன்ற அனைத்து செலவு செய்திருந்த நிலையில், கீழ்வேளூர் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப் பட்ட நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நெல் பயிர்கள் தண்டு உருளும் பக்குவத்திலும், தொண்டை கதிர் பக்குவத்திலும், கதிர் வெளி வந்து பால் கட்டு பருவத்தில் உள்ள நிலையில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்ட வயலில் பயிர்களில் ஆயிரக்கணக்கான புகையான் பூச்சிகள் பயிரின் அடிப் பகுதில் பயிரில் ஓட்டிக் கொண்டு பயிரின் சாரை உறிஞ்சி பயிர் பழுப்பு நிரத்தில் பயிர் காணப்பட்டு பின்னர் பயிர் காய்ந்து சறுகாக மாறி விடுகிறது. வயலில் முதலில் திட்டு திட்டாக பயிர்களின் இலைகள் லேசான மஞ்சள் நிரத்தில் தொடங்கி பின்னர் பயிர்கள் கருகியதுபோல் திட்டு திட்டாக காணப்பட்டு பின்னர் வயல் முழுவதும் புகை ஊடுருவது போல் அனைத்து பகுதிக்கும் பரவி வருகிறது.

தற்போது தொண்டை கதிர், கதிர் வெளி வந்து பால் கட்டும் பக்குவத்தில் உள்ள நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்கி வயல்கள் முழுவதும் பயர்கள் கருகிவிட்டது. தற்போது கீழ்வேளூர் பகுதியில் புகையான் பூச்சி தாக்குதலால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் பாதிப்பு அடைந்துள்ளது. புகையான் பூச்சி தாக்குதல் தற்போது கதிர் வெளி வந்த நிலையில் கதிர்கள் பால் கட்டும் நிலையில் புகையான் பூச்சி தாக்குதல் கதிர்களுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உரிஞ்சுவதால் பால் கட்டும் பக்குவத்தில் நெல் கதிர்கள் பதறாக மாறி பயர்கள் கருகியுள்ளது. புகையான் பூச்சி தாக்குதலால் அந்த பயிரை அறுத்து மாட்டுக்கு கூட வைக்கோளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் புகையான் பூச்சி தாக்குதல் பயிர் உள்ள வயல்களில் கோடை பயிரான உளுந்து, பச்சைப் பயிறு விதைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இந்த பூச்சி தாக்குதல் அறிகுறி குறித்து, அதை தடுப்பது குறித்தும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதலும், வேளாண்மை துறை அதிகாரிகள் புகையான் பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகள் கூறினாலும் அது சூரை நோய், குலை நோய் தாக்குதல் தான் என்று கூறி புகையான் பூச்சி தாக்குதலை அலட்சியப்படுத்தியதால் தான் புகையான் பூச்சி தாக்குதல் வயல்கள் முழுவதும் பரவி விவசாயிகளுக்கு பெறும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு பொரும்பாலான விவசாயிகள் வங்கிகளிலும், தனியாரிடமும் வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்த நிலையில் அதிக செலவு செய்து கதிர் வெளி வந்த நிலையில், புகையான் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதால் பொருளாதார நிலையில் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு தெரியாததால் என்ன செய்வது, எந்த பூச்சு மருந்தை அடிப்பது என்று தெரியாமல் உள்ளனர். கட்டுப்படுத்த கால மாதம் ஆக ஆக அதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகின்றனர். தற்போதுள்ள இந்த புகையான் மற்ற வயலுக்கும் மற்ற ரகங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே குலை நோய், பூச்சி தாக்குதல் மற்றும் உரத் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சம்பா நெற் பயிருக்குகளை எடுத்தல் உரம் இடுதல் போன்ற அனைத்து பணியும் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து சாகுபடி பணி முடித்து கதிர் வரும் நேரத்தில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், வேளாண்மை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடன் வேளாண்மை துறை புகையான் தாக்குதல் குறித்து வயல்களுக்கு சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : paddy fields ,Kivveloor ,area ,Nagai ,
× RELATED நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது