×

சின்னதாராபுரம் அருகே கார் மோதி முதியவர் படுகாயம்

க.பரமத்தி, டிச. 24: சின்னதாராபுரம் அருகே நடந்து சென்ற முதியவர் கார் மோதி படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (74) விவசாயி. இவர் அப்பகுதியில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கார் டிரைவர் மணிகண்டன் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chinatharapuram ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு சின்னதாராபுரம்...