கலெக்டர் அறிவிப்பு சின்னதாராபுரம் அருகே லாரியில் இருந்து தார்ப்பாய் விழுந்து பைக்கில் சென்றவர் படுகாயம்

க.பரமத்தி ஜூன் 21: சின்ன தாராபுரம் அருகே லாரியில் இருந்து தார்பாய் தவறி பைக்கில் வந்தவர்கள் மீது விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். க.பரமத்தி அடுத்த சின்னதாரபுரம் அருகே பனையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன்(65) இவரது மகன் அன்பரசு (47), இருவரும் விவசாயிகள் ஆவர். இருவரும் சொந்த வேலையாக ஊரில் இருந்து பைக்கில் புறப்பட்டு வந்துள்ளனர். சமத்துவபுரம் பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக தார்ப்பாய் தவறி பைக்கில் வந்த இருவர் மீதும் விழுந்தது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் முருகேசனுக்கு லேசான காயமும், அன்பரசுக்கு படுகாயமும் ஏற்பட்டது.

அன்பரசு கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக லாரி டிரைவர் ரங்கசாமி என்பவர் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் முதியவர் சடலம்: கரூர் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எல்லமேடு பகுதியில் இருந்து குஞ்சாம்பட்டி செல்லும் சாலையில் சுனைமேடு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அடையாளம் தெரியாத ஒரு முதியவர் இறந்து கிடந்தார்.

அவருக்கு 65 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ரவி சின்னதாராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம்பெண் மாயம்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேங்கடத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் குடும்பத்துடன் பவித்திரம் பகுதியில் தங்கி கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் பூவிழி (13). கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்து பார்த்ததுடன் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுரேஷ் க.பரமத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Collector ,announcement ,Chinatharapuram ,
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு