×

ராமையன்பட்டியில் சிசிடிவி கேமரா இயக்கம்

மானூர், டிச.22: ராமையன்பட்டி, அழகியபாண்டியபுரம் சந்திப்பு பகுதிகளில் சிசிடிவி கேமராவை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் குற்றப்பின்னணிகளை எளிதில் கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா ஆங்காங்கே பொருத்தப்பட்டு வருகின்றன. மானூர் போலீஸ் சரகம் ராமையன்பட்டி சந்திப்பு பகுதியில் 3 சிசிடிவி கேமராக்களும், அழகியபாண்டியபுரம் சந்திப்பில் 8 சிசிடிவி கேமராக்களும் கிருஷ்ணா மைன்ஸ் சார்பில் பொறுத்தப்பட்டு மானூர் காவல் நிலைய கண்காணிப்பில் உள்ளன. மேலும் 10 பேரிகார்டுகளும் வழங்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று ராமையன்பட்டி சந்திப்பில் தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் நடந்தன. எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா துவக்கி வைத்து பேசினார்.
கிருஷ்ணா மைன்ஸ் பொது மேலாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மானூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணா மைன்ஸ் துணை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் முரளி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் மாரியப்பன், சுப்பையா, பீட்டர்ஜாண், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர். கிருஷ்ணா மைன்ஸ் பிஆர்ஓ வெள்ளப்பாண்டி நன்றி கூறினார்.

Tags : Ramayanpatti ,
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து