×

புதிய நிர்வாகிகள் ஆணையருடன் சந்திப்பு தாசில்தார், துணை தாசில்தார் நேரடி நியமனம் நிறுத்திவைப்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தகவல்

நெல்லை, டிச. 22: தமிழகத்தில் வருவாய்த்துறையில் தாசில்தார், துணை தாசில்தார் நேரடி நியமனத்தை கைவிட வலியுறுத்தியதன் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.  
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக குமரேசன், துணை தலைவர்களாக ராஜகோபால், மங்களபாண்டியன், தூத்துக்குடி செந்தூர்ராஜன், தமிழ்மணி, பாலமுருகன், திருவண்ணாமலை பார்த்திபன், பொதுச் செயலாளராக முருகையன், செயலாளர்களாக சங்கரலிங்கம், மணிகண்டன், நெல்லை சுப்பு, அன்பழகன், வெங்கடேஸ்வரன், ராஜசேகரன், பொருளாளராக சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:  இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளரின் தகுதி காண் பருவம் அதிகாரத்தை கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும். பதவி உயர்வு அலுவலர்கள், பதவி உயர்வு பெற உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பணிக்கு விலக்களிக்க வேண்டும், உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடத்தை துணை தாசில்தாராக உயர்த்துதல், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணி முதுநிலை நிர்ணயம் செய்வது தொடர்பாக விதி திருத்தம் மேற்கொள்வது, அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர் நிலை அலுவலர்களுக்கு பதவி உயர்வு தகுதி காலத்தை குறைப்பது, காலியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புதல், ஜாக்டோ, ஜியோ போராட்ட பாதிப்புகளை சரி செய்வது,

துணை தாசில்தார், தாசில்தார்களுக்கு தனி ஊதியம், சிறப்பு படி தொடர்வது, பேரிடர் மேலாண்மை மற்றும் பிறப்பு, இறப்பு பணிகளுக்கு பணியிடம் ஏற்படுத்துவது, இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு தனி விதி தொகுதி ஏற்படுத்துவது, துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைவாக வெளியிடுதல், தேர்தல் செலவினம் முழுமையாக வழங்குதல், கடலூர், தேனி, ராமநாதபுரம், விழுப்புரம், ஒருங்கிணைந்த நெல்லை மற்றும் வேலூர் மாவட்ட பிரச்னைகள் குறித்தும் அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை தாசில்தார், தாசில்தார் நிலையில் நேரடி நியமனம் தொடர்பாக அரசு மட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை உடனே கைவிட முறையீடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.

Tags : Executives ,Das Dillard ,
× RELATED மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது