×

டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,428 டால்பின்கள் வேட்டை!: செந்நிறமாக மாறிய கடற்கரை..சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொந்தளிப்பு..!!

டென்மார்க்: டென்மார்க் ஆளுமைக்குட்பட்ட ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டானிஷ் நாட்டில் கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நிகழ்வாக நடைபெறும் கிரீன் டிராப் வேட்டையின் ஒரு பகுதியாக ஃபாரோ தீவுகளின் கடற்கரைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,428 டால்பின்கள் கொல்லப்பட்டன. வடக்கு அட்லான்டிக் தீவு கூட்டத்தில் குவியும் டால்பின்களை வேட்டையாடுவது என்பது இறைச்சி, மருத்துவ பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி கடலில் மிதந்த டால்பின்கள் கொல்லப்பட்டு மோட்டார் படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது டால்பின்களின் உடல்களில் இருந்து உதிர்த்த உதிரத்தால் நீல வண்ண கடற்பரப்பு, செந்நிறமாக காட்சியளித்தது. டால்பின்களை கொல்வதை பாரம்பரிய நிகழ்வாக மேற்கொண்டாலும் உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த கொடூரத்தை பார்த்து கொதித்துப்போயுள்ளனர். மேலும் கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதேவேளையில் தங்களின் உணவு தேவைக்காகவே டால்பின்களை கொள்வதாகவும், தங்கள் உரிமையை பாதுகாக்க போராடுவோம் என்றும் ஃபாரோ தீவு வாசிகள் தெரிவிக்கின்றனர். …

The post டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,428 டால்பின்கள் வேட்டை!: செந்நிறமாக மாறிய கடற்கரை..சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொந்தளிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Denmark's Faroe Islands ,Denmark ,Faroe Islands, Denmark ,Sparkled Beach Ecologist ,Dinakaran ,
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...