×

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து..!!

ஐக்கிய நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து பின்லாந்து 7வது ஆண்டாக முதலிடம் வகித்துள்ளது. உலக மகிழ்ச்சி அறிக்கை 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 150,000 பேரின் சுய அறிக்கை எடுக்கப்பட்டது. அதில் டென்மார்க் இரண்டாம் இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும் , ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் அடுத்த வரிசையிலும் உள்ளன.

பின்லாந்தின் கலாச்சாரம், நேர்மறையான நல்வாழ்வை ஊக்குவிப்பது, நிறுவனங்களின் மீதான நம்பிக்கை, இயற்கைக்கான அணுகல் மற்றும் குறைந்த மன அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செமாஃபோர் அறிக்கை பின்லாந்து நாட்டின் தூதர் இந்த பட்டியலை அறிவித்தார். மேலும் பின்லாந்தில் உள்ள பல குடியிருப்பாளர்கள் சமூக ரீதியாக செயல்படுவதாகவும். மக்கள் ஒருவருக்கு ஒருவர் நாள்தோறும் உதவி செய்வதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்லாந்து நேர்மறையான பணியிடங்களை வளர்ப்பதிலும், வேலை-வாழ்க்கை சமநிலையை மதிப்பிடுவதிலும் ஆர்வமாக உள்ளது. அந்தவகையில் வயது மகிழ்ச்சியின் அடிப்படையிலும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் வெளியிடப்படும். செர்பியா 37, பல்கேரியா 81, ஆகியவை கடந்த அறிக்கையில் மகிழ்ச்சி மதிப்பெண்களில் கணிசமாக உயர்ந்துள்ளன. மேலும், அமெரிக்காவும், ஜெர்மனியும் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களிலிருந்து வெளியேறி முறையே 23 மற்றும் 24 வது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகைய ஐக்கிய நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி வாழ்க்கையின் மீதான திருப்தி, சமூக ஆதரவு, சுதந்திரம், ஊழல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியா 126வது இடத்தில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்

பின்லாந்து
டென்மார்க்
ஐஸ்லாந்து
ஸ்வீடன்
இஸ்ரேல்
நெதர்லாந்து
நார்வே
லக்சம்பர்க்
சுவிட்சர்லாந்து
ஆஸ்திரேலியா

30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான நாடுகள்

லிதுவேனியா
இஸ்ரேல்
செர்பியா
ஐஸ்லாந்து
டென்மார்க்
லக்சம்பர்க்
பின்லாந்து
ருமேனியா
நெதர்லாந்து
செ குடியரசு

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான நாடுகள்

டென்மார்க்
பின்லாந்து
நார்வே
ஸ்வீடன்
ஐஸ்லாந்து
நியூசிலாந்து
நெதர்லாந்து
கனடா
ஆஸ்திரேலியா
அமெரிக்கா

 

The post உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து..!! appeared first on Dinakaran.

Tags : Finland ,United Nations ,Index ,Denmark ,
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...