×

வாக்கு சீட்டுகள் அச்சடிக்கும் பணி

ஈரோடு, டிச. 22: வாக்கு சீட்டுகள் அச்சடிக்கும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நேற்று ஆய்வு செய்தார்.  ஈரோடு  மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து  மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். தேர்தலுக்கான வாக்குசீட்டுகள் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு  அச்சு கூடத்தில் அச்சடிக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து  
வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் பார்வையாளர்  விவேகானந்தன் உரிய காலத்திற்குள் வாக்குசீட்டுகளை அச்சடித்து அந்தந்த  ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கொடுமுடி,  சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டதோடு  கொடுமுடியில் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவது குறித்து  அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.   இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும்  பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags :
× RELATED ஈரோட்டில் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி