×

ஆட்டையாம்பட்டியில் மார்கழி பெருவிழா

ஆட்டையாம்பட்டி, டிச.19:  ஆட்டையாம்பட்டியில், வேலநத்தம் கம்பன் கழகம் சார்பில், 6வது ஆண்டாக மார்கழி பெருவிழா மற்றும் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் சண்முகம்  தலைமையில், பேராசிரியை நாஞ்சில் முத்துலட்சுமி, சாந்தி, சித்ரா, பத்மாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், இலக்கியம் காட்டும் இல்லறம் என்ற தலைப்பில், பேராசிரியை நாஞ்சில் முத்துலட்சுமி சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, சேலம் செங்குட்டுவன், சங்கரநாரயணன், அருட்செல்வி, அழகர் ராமானுஜம், சஞ்சீவிராயன், பனசை மூர்த்தி, சவுந்திரபாண்டியன், நெல்லை சுப்பைய்யா, அறிவொளி, கீரை பிரபாகரன், சுந்தர ஆவுடையப்பன், சேலம் ராமன், தேவி குணசேகரன், சீனி சம்பத், உழவன் தங்கவேல், லீலாவதி கரிகாலன், தமிழரசி செந்தில்குமார் மற்றும் வையாபுரி ஆகியோர் தினந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை வேலநத்தம் கம்பன் கழக கவுரவ தலைவர் சாலை சண்முகம், தலைவர் ராவணன், நிறுவனர் செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Morocco Festival ,
× RELATED பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி