×

திருச்செங்கோட்டில் தேசிய மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, டிச.19:  திருச்செங்கோட்டில்  58வது தேசிய மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவிகள் கலந்து  கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் சுவாமி  விவேகானந்தா பார்மசி  கல்லூரியை சேர்ந்த, சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து  கொண்டனர். பழைய பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணியை,  திருச்செங்கோடு  அரசு மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இதில் சுவாமி விவேகானந்தா பார்மசி கல்லூரி முதல்வர்  முருகானந்தம்,  திருச்செங்கோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று,  அரசு மருத்தவமனையில் முடிவடைந்தது.

இதில் சுய மருத்துவம் கூடாது,  மருத்துவர் மருந்து சீட்டு இல்லாமல், மருந்துகளை தானே சென்று கடைகளில் வாங்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. பேரணியின் போது, மருந்தாளுனர் உதவி  இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு தட்டிகளையும், குடிப்பழக்கத்தின் தீமைகள் குறித்த தட்டிகளையும் மாணவிகள் ஏந்தி வந்தனர். மேலும்,  மருந்தாளுனரின் அவசியம் குறித்து  துண்டுபிரசுரங்களை, பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags : awareness rally ,National Pharmacists Day ,Tiruchengode ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி