×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை 2.25 கோடி

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப உண்டியல் காணிக்கையாக ₹2.25 கோடி கிடைத்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாைல 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியில் சுமார் 290 பேர் ஈடுபட்டனர். இதில் 2 கோடியே 25 லட்சத்து 62 ஆயிரத்து 155ம், 292 கிராம் தங்கம், 2,684 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

Tags : Thiruvannamalai Annamaliyar Temple ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை