×

காங்கயத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்லம்

காங்கயம்,டிச.19:கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையோட்டி கிறிஸ்தவர்கள், வீடுகளுக்கு, வீடு வீடாக சென்று கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிப்பதும், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி செய்தும் வருவதும் வழக்கம். அதன்படி காங்கயம் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் ஆயர் யோசபாத்சிம்மர் ஹனி தலைமையில் சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க, கேரல் ரவுண்ட் என்னும் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி காங்கயம் போதக சேகரத்திற்கு உட்பட்ட 12 சபைகளின் கிறிஸ்தவ மக்களின் வீடுகளுக்கு பவனி சென்று வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு காங்கயம் அருகேயுள்ள கல்லேரி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பாடல்கள் பாடி சென்றனர்.

Tags : Christmas ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...