×

சீர்காழி அருகே நாங்கூரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பாற்கடல் குளம் நிரம்பியது

சீர்காழி, டிச.19: சீர்காழி அருகே நாங்கூரில் உள்ள திருப்பாற்கடல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய குளம் அமைந்துள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனால் குளத்தில் அதிக அளவில் தண்ணீர் நிரம்பாமல் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் குடிமராமத்து பணி திட்டத்தின்கீழ் மண் எடுக்கப்பட்டதால் குளம் ஆழமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும், மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால் குளத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வந்து குளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பாற்கடல் குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Sirkazhi ,Nankur ,pond ,Thiruppakkarai ,
× RELATED சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது