×

நாமகிரிப்பேட்டையில் ₹4 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, டிச.18:  நாமகிரிப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று ₹4 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டைவேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. நேற்றைய ஏலத்துக்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விரலி மஞ்சள் 71 மூட்டை, கிழங்கு மஞ்சள் 30 மூட்டை, பனங்காலி மஞ்சள் 4 மூட்டை என 105 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹7,052க்கும், குறைந்தபட்சம் ₹5,859க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹5,969க்கும், குறைந்தபட்சம் ₹4,319க்கும், பனங்காலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹6,449க்கும், குறைந்தபட்சம் ₹5,602க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 105 மூட்டை மஞ்சள், ₹4 லட்சத்துக்கு ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பரபரப்பு...