×

64 சதவீத சந்தை பங்களிப்புடன் தொடர்ந்து முன்னிலை வகித்து ‘பொலேரோ பிக்-அப்’ சாதனை

சென்னை, டிச.18: பிக்-அப் வாகன பிரிவில் மகிந்திரா நிறுவனத்தின் பொலேரோ பிக்-அப் தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளது.  மகிந்திரா நிறுவனத்தின் பொலேரோ பிக்-அப்-ன் முதல் வாகனம் 1999ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிக்-அப் வாகனப் பிரிவில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. சமீபத்தில் 15 லட்சம் பொலேரோ பிக்-அப்- வாகனங்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்த நிறுவனம் 4 பிராண்டுகளில் 30க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இதனால், பிக்-அப் வாகன பிரிவில் 64% சந்தை பங்களிப்புடன் இந்த நிறுவனம் முன்னணியில் திகழ்கிறது. மேலும், 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கி.மீ என சிறந்த உத்தரவாதம், குறைந்தபட்ச பராமரிப்பு செலவுகளை வழங்குகிறது, இதுகுறித்து மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவன ஆட்டோமோடிவ் துறை தலைவர் ராஜன் வதேரா  கூறுகையில், “20 ஆண்டுகளுக்கும் மேலாக பிக்-அப் வாகன பிரிவில் முன்னோடியாக தொடர்வதால், எங்கள் வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் எங்கள் ஆய்வு அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மிக வலுவாக உருவாக்கியுள்ளோம். 15 லட்சம் வாகனம் விற்பனை என்ற மைல்கல், எங்கள் வாடிக்கையாளர்களின் ப்ராண்டின் மீது கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கைக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது’’ என்றார்.

Tags :
× RELATED பத்திர எழுத்தர் ஆபிசில் புகுந்த பாம்பு