×

ஆழ்துளை கிணற்றில் இறப்பை தடுக்க கோரி மாஜி எஸ்எஸ்ஐ பைக்கில் விழிப்புணர்வு பிரசாரம்

ஈரோடு, டிச. 18:  ஆழ்துளை கிணறு விழுந்து இறப்பதை தடுக்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்எஸ்ஐ பைக்கில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சிவாஜி (64). இவர், ஆழ்துளை கிணற்றில் இறப்பை தடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அவரது பைக்கில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்து, கடந்த மாதம் 25ம் தேதி கரூரில் இருந்து புறப்பட்டார். இவர் நேற்று ஈரோடு வந்தார். ஈரோடு எஸ்பி சக்திகணேசன் மற்றும் டிஆர்ஓ கவிதா ஆகியோரிடம், சிவாஜி தனது விழிப்புணர்வு பயணம் குறித்து தெரிவித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் விழிப்புணர்வு மேற்கொண்டார். இதுகுறித்து சிவாஜி நிருபர்களிடம் கூறியதாவது:பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயணம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கையை காக்க வேண்டும் என வலியுறுத்தி பயணம் மேற்கொண்டுள்ளேன். தற்போது, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இது தேசிய அளவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்துவதால், பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு போன்றவற்றை பாதுகாப்பாக மூடி போட்டும், தடுப்பு சுவர் அமைத்தும் தடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி கடந்த நவ.25ம் தேதி முதல், கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், நாமக்கல் என 13 மாவட்டங்களில் பைக்கில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளேன். நேற்று ஈரோடு வந்தேன்.
தமிழகம் முழுவதும் 6500 கி.மீ. தூரம் பயணித்து, ஒரு லட்சம் துண்டு பிரசுரம் அச்சிட்டு, அவற்றை வழங்கி வருகிறேன். தற்போது 2,500 கி.மீட்டர் தூரம் பிரசாரம் செய்துள்ளேன். இதைத்தொடர்ந்து, திருப்பூர், கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கும் பைக்கில் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

Tags : Magi SSI ,well ,death ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...