×

பழூர் ஊராட்சியில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து கல்லூரி மாணவர், கோழி வியாபாரி பலி

திருச்சி, டிச. 18: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர், கோழி வியாபாரி பலியாயினர்.தூத்துக்குடி கே.ஆர்.நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நெப்போலியன். இவரது மகன் வேல்குமார்(20). திருச்சியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர்கள் கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஆல்வின், திருச்சி உய்யக்கொண்டான்திருமலையை சேர்ந்த பாலா மகன் ஆத்ரேயா ஆவர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் இண்டிகேட்டர் போடாமல் திரும்பியதில் கார் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த வேல்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிந்து கார் டிரைவர் திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த பிரபாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து: ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(70), கோழி வியாபாரி. ஊர் ஊராக சென்று கோழி விற்று வருகிறார். நேற்று முன்தினம் திருச்சியில் வியாபாரத்துக்கு வந்த அவர் செம்பட்டு பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் மாரிமுத்து இறந்தார். தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து நீடாமங்கலம் அருகே கீழகடம்பூரை சேர்ந்த முகமது ஷாஜானை(24) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு இதுவரை எந்த பலனுமில்லை. எனவே வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை ராஜலட்சுமி நகர் பகுதி மக்கள் புறக்கணிக்கிறோம். வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி ஓட்டளிக்காமல் தேர்தலை புறக்கணிக்கிறோம்’ என்றனர்.

Tags : Pallur ,
× RELATED பள்ளூர் வாராஹி