×

புதுக்கோட்டை பகுதியில் அரிவாள், மண்வெட்டி தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள் மும்முரம்

புதுக்கோட்டை, டிச. 18: மத்திய பிரதேசத்தில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டைக்கு வந்து கத்தி, மண்வெட்டி, அரிவாள் ஆகியவற்றை சாலையோரத்தில் உடனுக்குடன் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டையில் வறட்சி நிலவியது. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு விவசாயம் பொய்த்து போனது. மேலும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி மாற்று பணிக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு தொடக்கத்தில் நல்ல மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் பரவலாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள், கதிர் அரிவாள் ஆகியவை அதிக அளவில் தேவைப்படும்.இந்நிலையில் புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் மத்திய பிரதேசத்தில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் வருகை தந்து சாலையோரத்தில் தற்காலிக கடை அமைத்து உடனுக்குடன் மண்வெட்டி, கதிர் அரிவாள் ஆகியவற்றை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இரும்பை நெருப்பில் வைத்து அதை ஊதி நெருப்புக் குழம்பில் தகதகவென்று இரும்பை சுத்தியலால் 3 பேர் அடித்து அரிவாள், கதிர் அரிவாள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். மிகவும் குறைந்த விலைக்கு 100 ரூபாய் முதல் ரூ. 500 ரூபாய் வரை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிகக்குறைந்த அளவில் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு தேவையான கதிர் அரிவாள், மண்வெட்டியை வாங்கி செல்கின்றனர்.

Tags : area ,Pudukkottai ,Northern Province ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...