×

பொறியாளர்கள் அலட்சியம் சோதனையும் இல்லை, கண்காணிப்பும் இல்லை தேர்தல் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை

புதுக்கோட்டை, டிச.18: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் ஒரு இடத்தில் கூட எந்தவித சோதனை மற்றம் கண்காணிப்பு பணிகளை செய்யாததால் கட்டுபாடுயின்றி தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றாட்டு கூறுகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டகளாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறும். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னாவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதபோல் இரண்டம் கட்டமாக புதுக் அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மனமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு இடத்தில் கூட வாகன சோதனை உள்ளிட்ட எந்த சோதனையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்யவில்லை. இதனால் கட்டுபாடு இல்லாமல் அனைத்து வழிகளிலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றாட்டை தெரிவித்தனர். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் சிக்கிய பணத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு உரியவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்த போது பணம் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் பெறுவதை தவிர மற்ற எந்த பணிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்வதில்லை.இது குறித்து எதிர்கட்சியினர் கூறியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பல நாட்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு இடத்தில் கூட வாகன சோதனை உள்ளிட்ட எந்த சோதனையும் நடைபெறவில்லை. வேட்பு மனு தாக்கல் தொடங்கி தற்போது வரை அனைத்தும் விதிமுறைகள் மீறப்பட்டு தான் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று என்ன தோன்றுகிறது. சட்டமன்ற தேர்தலில் தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தங்களது கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். தற்போது தொகுதிக்கு ஒரு பறக்கும் படை, ஒரு மணி நேரம் கூட தங்கள் கண்காணிப்பு பணியை செய்யவில்லை. தற்போது வேட்பு மனு தாக்கல் முடிந்து அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இப்போது பல இடங்களில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களின் பணபலத்தை காட்டுவார்கள். இதனை தடுக்க போதிய கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். என்றனர்.

Tags : election ,engineers ,
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...