×

தொடர் மழையால் சேதமான சிவந்திபுரம் சாலை

வி.கே.புரம், டிச. 18: நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் முக்கியமான சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு பாபநாச சுவாமி கோயில், ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்டவற்றிற்கு நாள்தோறும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் பாபநாசம் வருவோர், சிவந்திபுரம் மெயின்ரோடு வழியாகத்தான் வர வேண்டும்.

பாபநாசத்தில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் சிவந்திபுரம் வழியாகத்தான் செல்ல வேண்டும். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கியுள்ளாகி வருகின்றனர். மேலும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.
இச்சாலை பள்ளங்களில், கடந்த சில நாட்களுக்குமுன் சிவந்திபுரத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மண்ணை கொட்டி நிரப்பி சீரமைத்தனர். ஆனால் அடுத்த நாள் பெய்த மழையில் சாலை மீண்டும் மோசமானது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Sivanthipuram ,road ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து