×

வாடிப்பட்டி ஒன்றியத்தில் 763 பேர் மனு தாக்கல்

வாடிப்பட்டி, டிச. 17: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 763 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர் வாடிப்பட்டி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி, 14 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 23 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 180 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ந் தேதி துவங்கியது. இறுதி நாளான நேற்று வாடிப்பட்டி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் சி.புதூர் சேகர் மனைவி தனம் உட்பட 7 பேரும், 14 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் குருவித்துறை பசும்பொன்மாறன், மன்னாடிமங்கலம் ரேகா உள்ளிட்ட திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பாஜக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 84 பேரும், 23 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 138 பேரும், 180 ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 534 பேர் என மொத்தம் 763 பேர் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED உலக கால்நடை தின விழா