×

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் லெனினிஸ்ட் நிர்வாகி பேச்சு

நாகர்கோவில், டிச.17: குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி கவிதா கிருஷ்ணன் தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை ரத்துசெய்ய வேண்டும். முன்னுரிமை இல்லாத ரேஷன்கார்டு முறையை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும். 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமை வகித்தார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: மக்களின் உரிமைகளுக்காக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகிறோம். அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகளை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இனி தேசிய மக்கள்தொகை பதிவேட்டை கொண்டு வருவார்கள். அதன்படி தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டு வரப்படும். குடியுரிமை பதிவேடுக்குள் வராதவர்களை அகதிகளாக கருதுவர்.முஸ்லீம்கள் நாடு இல்லாதவர் என்று அறிவிக்கப்படுவர். குடியுரிமை திருத்த சட்டத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நிர்வாகிகள் நடராஜன், சுசீலா, தேசிகன், ரமேஷ், ஜாண்சன், கணபதி, கார்மல், ராதாமேரி, தங்கலெட்சுமி உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Leninist ,
× RELATED தொகுதி பங்கீடு நிறைவு பீகாரில் ஆர்ஜேடி 26, காங். 9, கம்யூ. 5 இடங்களில் போட்டி