×

தொகுதி பங்கீடு நிறைவு பீகாரில் ஆர்ஜேடி 26, காங். 9, கம்யூ. 5 இடங்களில் போட்டி

பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில், ஆர்ஜேடி 26 தொகுதிகளும், காங்கிரசுக்கு 9 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. பீகாரில் ஆர்ஜேடி தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்),இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தியா ‘ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசா ரி கட்சிகள் அடங்கியுள்ள மெகா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக அந்த கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.

அக்கட்சிகள் இடையே ஏற்பட்டு உள்ள உடன்பாட்டின்படி, அதிகபட்சமாக ஆர்ஜேடி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ்-9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இது தொடர்பான அறிவிப்பை ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியிட்டார். தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்தது என்றும் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என மனோஜ் ஜா தெரிவித்தார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இருந்தனர்.

தொகுதி பங்கீட்டின்படி பூர்னியா தொகுதியை ஆர்ஜேடி வாங்கி கொண்டுள்ளது. இந்த தொகுதியில் சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த பப்பு யாதவ் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால், இந்த தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து ஆர்ஜேடிக்கு வந்துள்ள பீமா பார்தி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆர்ஜேடி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

The post தொகுதி பங்கீடு நிறைவு பீகாரில் ஆர்ஜேடி 26, காங். 9, கம்யூ. 5 இடங்களில் போட்டி appeared first on Dinakaran.

Tags : RJD ,Bihar ,CAMU ,Patna ,India Coalition Parties ,Congress ,Indian Communist ,Marxist Leninist ,Dinakaran ,
× RELATED இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம்...