×

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கரூர் வெங்கமேடு பகுதியில் கரும்பு விற்பனை விறுவிறுப்பு

கரூர், டிச. 16: கரூர் வெங்கமேடு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொங்கல் பண்டிகை என்றாலே மஞ்சுவிரட்டுக்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது கரும்புதான். பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக கரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் கரும்பு விற்பனை அதிகளவு நடைபெறுவது வாடிக்கை. அந்த சமயங்களில், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு கரும்புகள் மொத்தமாக வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் வெங்கமேடு பகுதியில் கரும்பு விற்பனை பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் இந்த கரும்புகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து ஒரு கரும்பு ரூ. 50க்கும், கட்டு கரும்பு ரூ. 200க்கும் என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.கரும்பு பிரியர்கள் வெங்கமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வரும் கரும்புகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : celebration ,vengamedu area ,karur ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...