×

ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்

ஆரணி, டிச.16: ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில்  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.அதன்படி, ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி 4, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 36 பதவியிடங்கள் உள்ளன. அதில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவிற்கு 3 இடங்களும், பாமகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 36 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவிற்கு 27 இடங்களும், பாமகவிற்கு 7 இடமும், தேமுதிகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிட அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யாமல் இருந்ததால் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தற்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி நாள் என்பதால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஒட்டுமொத்தமாக இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Tags : AIADMK ,panchayats ,Orani ,West Aranyapala ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...