×

கலெக்டர் செல்போன் எண்ணை காட்டி ராணிப்பேட்டை வாலிபர் நன்கொடை வசூல்

கிருஷ்ணகிரி, டிச.16: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரின் செல்போண் எண்ணை தெரிந்து கொண்ட ஒரு நபர்,  பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் அந்த எண்ணை காட்டி, தான் ஒரு பொதுமக்கள் சேவகன் என்றும், அதற்கு தனது வங்கி கணக்கில் நன்கொடை செய்யுங்கள், அதனை வைத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கமுடியும் என பலரிடம் நன்கொடை கேட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர், நன்கொடை வசூல் செய்யும் நபர் குறித்து விசாரிக்குமாறு போலீசாரை கேட்டுக்கொண்டார். இதன்பேரில், கிருஷ்ணகிரி போலீசார் நடத்திய விசாரணையில் கலெக்டர் செல்போன் எண்ணை காண்பித்து பொதுமக்களிடம் நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டவர், ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தனபாரதி என்கிற சந்தானம்(39) என்பதும், இவர் மீது நீலகிரி மாவட்டத்தில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து கலெக்டரின் நேரடி உதவியாளர் ராமமூர்த்தி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்,  சந்தானபாரதி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.


Tags : Collector ,Ranipettu Youth ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...