×

டிரினிடி கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிருஷ்ணகிரி, டிச.13:  கிருஷ்ணகிரி அருகே டிரினிடி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மற்றும் டிரினிடி அகாடமி பள்ளிகளின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவை பள்ளியின் நிறுவனர் கிம் அம்மா தலைமையேற்று நடத்தி வைத்தார். கிறிஸ்துமஸ் குடிலை, பாஸ்டர் மார்க்டேனியல் திறந்து வைத்தார். பள்ளி இயக்குனர் பிரசாத்ரெட்டி வரவேற்றார். விழாவில், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை தாளாளர் காட்வின்மைக்கேல் கொர்னிலியஸ், அறிவுரையாளர் எட்வர்ட் சுகுணராஜ், முதல்வர் பாரதிரெட்டி வழங்கினர். சிறப்பு விருந்தினராக அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டேவிட்அமிர்தராஜன், கிறிஸ்துமஸ் குறித்து வாழ்த்தி பேசினார். விழாவில் 2018-19ல் 10ம் வகுப்பு மற்றம் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த விழாவில் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, இயேசுவின் காவியம் என்ற நாடகம், நடனம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பாஸ்டர் மார்க்டேனியல் ஜெபத்துடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.


Tags : Trinity Educational Institute ,
× RELATED தனியார் ஊழியரிடம் ₹2.52 லட்சம் மோசடி