×

டெட் ஸ்கை மீட்பு வாகன பைக் இயக்குதல் பயிற்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 623 பேர் வேட்பு மனு தாக்கல்

புதுக்கோட்டை, டிச.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று 623 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27ம்தேதி முதல் கட்டமாகவும், 30ம் தேதி 2-வது கட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்னண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2ம் கட்டமாக அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நடக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 29 ஆயிரத்து 828 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 31 பேர் என மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 835 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராடசி ஒன்றியங்களிலும் 2 ஆயிரத்து 301 வாக்கு சாவடி மையங்களை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 3வது நாளான நேற்று மட்டும் கிராம பஞ்தலைவர் பதவிக்கு 234 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 353 பேரும் மனுதாக்கல் செய்தனர், அதேபோல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 32 பேரும் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 787 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், தேர்தல் நடப்பது உறுதியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வட்டாரங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன, அதேபோல் கூட்டணி கட்சிகள் தாங்கள் வாய்ப்பு உள்ள வார்டுகள் குறித்து கட்சிக்குள் விவாதம் தொடங்கியுள்ளன.

Tags : Dead Ski Rescue Vehicle Bike Running Training Puthukkottai District ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்