×

கீழப்பாவூரில் மாற்றுத்திறனாளிகள் தினம்

பாவூர்சத்திரம், டிச.11: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், கீழப்பாவூர் வட்டார வளமையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் வில்சன் சத்தியராஜ், முத்துலிங்கம் ஆகியோர் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமாரிலதா முன்னிலை வகித்து உலக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். ஆசிரியர் பயிற்றுநர் ஜாண்சன் வரவேற்றார்.

பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சதீஷ் கிங்ஸ்லி பேசினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர்நிரப்புதல், பலூன் உடைத்தல், பந்து எறிதல் மற்றும் தாவிக் குதித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பங்கேற்ற 70 மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வமீனாட்சி  நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளார்  மற்றும் கணினி விவர பதிவாளர் ஆகியோர்  செய்திருந்தனர்.

Tags : Persons ,
× RELATED புயல், கனமழை காரணமாக உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி ஒத்திவைப்பு