×

தேன்கனிக்கோட்டையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்

தேன்கனிக்கோட்டை, டிச.11: தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து பேரூராட்சி அலுவலகம், தாசில்தார்  ஆகியோரிடம் மனு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை சார்பில், விளையாட்டு மைதானம் அமைக்க ₹50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம் அமைக்க தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை லட்சுமி நரசிம்மாசுவாமி கோயில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இதில் நகரின் தொலை தூரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் அமைந்துள்ளதாலும், திம்மசந்திரம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க பட்டாளம்மன் கோயில் அருகே அரசு இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும். எனவே, பட்டாளம்மன் கோயில் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : playground ,Thenkanikottai ,
× RELATED மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை...