×

உள்ளாட்சி தேர்தல் சந்தேகம் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள்

சிவகாசி, டிச. 10: உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தில் முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. உள்ளாட்சி தேர்தல் டிச. 27, 30ல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை திமுக நாட உள்ளது. இதனால் உ்ளளாட்சி தேர்தல் நடைபெறமா என்ற சந்தேகம் வேட்பாளர்கள் மத்தியில் நீடிக்கிறது. செலவு செய்து வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தேர்லுக்கான மனுதாக்கல் டிச. 9ம் தேதி முதல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல் நாளான நேற்று பள்ளபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு நாராயணன்(58) மற்றும் அவரது மகன் குருமூர்த்தி (32) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த இருவரை தவிர  மாலை 5 மணி வரை ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என எந்த பதவிக்கும் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆனால் போட்டியிட விரும்பியவர்கள் விண்ணப்ப படிவத்தை அலுவலகத்தில் வாங்கி சென்றனர். சுயேச்சைகளுமே எந்த பதவிக்கும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : election ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...