×

விருதுநகர் மாவட்ட ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது

விருதுநகர், டிச.10:தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று காலை துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிச.16 கடைசி நாள். டிச.17 வேட்புமனு பரிசீலனை, டிச.19 வேட்பு மனு வாபஸ் பெறலாம். விருதுநகர் மாவட்டத்தில் 20 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதவிகளுக்கான வேட்பு மனுதாக்கல் துவங்கியது. விருதுநகர் மாவட்ட 11 ஊராட்சிகளில் ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டுகள் நிலவரம்:  விருதுநகர்: ஒன்றிய வார்டுகள் 25, ஊராட்சி தலைவர்கள் 58, கிராம ஊராட்சி வார்டுகள் 432. காரியாபட்டி: ஒன்றிய வார்டுகள் 12, ஊராட்சி தலைவர்கள் 36, கிராம ஊராட்சி வார்டுகள் 252.திருச்சுழி: ஒன்றிய வார்டுகள் 15, ஊராட்சி தலைவர்கள் 40, கிராம ஊராட்சி வார்டுகள் 282. நரிக்குடி: ஒன்றிய வார்டுகள் 14, ஊராட்சி தலைவர்கள் 44, கிராம ஊராட்சி வார்டுகள் 285.

அருப்புக்கோட்டை: ஒன்றிய வார்டுகள் 15, ஊராட்சி தலைவர்கள் 32, கிராம ஊராட்சி வார்டுகள் 246. ராஜபாளையம்: ஒன்றிய வார்டுகள் 24, ஊராட்சி தலைவர்கள் 36, கிராம ஊராட்சி வார்டுகள் 312. திருவில்லிபுத்தூர்: ஒன்றிய வார்டுகள் 15, ஊராட்சி தலைவர்கள் 29, கிராம ஊராட்சி வார்டுகள் 246. வத்திராயிருப்பு: ஒன்றிய வார்டுகள் 13, ஊராட்சி தலைவர்கள் 27, கிராம ஊராட்சி வார்டுகள் 207. சிவகாசி: ஒன்றிய வார்டுகள் 31, ஊராட்சி தலைவர்கள் 54, கிராம ஊராட்சி வார்டுகள் 429. சாத்தூர்: ஒன்றிய வார்டுகள் 16, ஊராட்சி தலைவர்கள் 46, கிராம ஊராட்சி வார்டுகள் 321. வெம்பக்கோட்டை: ஒன்றிய வார்டுகள் 20, ஊராட்சி தலைவர்கள் 48, கிராம ஊராட்சி வார்டுகள் 360. மாவட்டத்தில் மொத்தம் 20 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 200 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 450 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 3372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு துவங்கியது.

Tags : filing ,district panchayats ,Virudhunagar ,elections ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...