×

பேரம் பேசி மிரட்டி நகைகளை பறித்து செல்லும் வெளிமாவட்ட போலீசாரை கண்டித்து நகை, அடகுகடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 10: பேரம் பேசி மிரட்டி நகைகளை பறித்து செல்லும் வெளிமாவட்ட போலீசாரை கண்டித்து தஞ்சையில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகைக்கடை காரர்களையும், அடகு கடைகாரர்களையும் மிரட்டி நகைகளை பறிக்கும் வெளிமாவட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகை மற்றும் அடகு கடைகாரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தொப்புள் பிள்ளையார் கோயில் அருகில் நகைக்கடை, அடகு கடை உரிமையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகைக்கடை காரர் சங்க நிர்வாகி வாசுதேவன் தலைமை வகித்தார். அடகு கடை சங்க தலைவர் காசிபாண்டியன், செயலாளர் பெரியகருப்பன், நகைக்கடை சங்க நிர்வாகிகள் வாசு, ராஜா,சாமிநாதன், ராஜேஸ்கண்ணா முன்னிலை வகித்தனர். வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, நகர செயலாளர் கந்தமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சையில் கடந்த சில நாட்களாக திருடர்களை அழைத்து வந்து குறிப்பிட்ட நகை கடையை காண்பித்து விட்டு பின்னர் மறுநாள் காலை கடை திறந்தவுடன் நாங்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்த போலீஸ், இவனிடமிருந்து நகைகளை வாங்கியுள்ளீர்கள் என கேட்டு கடைகாரரை காரில் ஏற்றி கொண்டு மறைவான இடத்தில் வைத்து பேரம் பேசுகிறார்கள். பேரம் பணியவில்லை என்றால் தகாத வார்த்தைகளால் பேசியும், கடை உரிமையாளர்களின் மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட நகைகளை தராவிட்டால் உனது கணவனை கைது செய்து வெளியில் வராத வகையில் சிறையில் அடைத்து விடுவோம் என போலீசார் பேரம் பேசுகிறார்கள். பின்னர் 5 பவுன் நகைக்கு 10 பவுன் நகைகளை வாங்கி கொள்கிறார்கள். பின்னர் 3 நாட்களுக்கு பிறகு மற்றொரு மாவட்ட போலீசார், அதே திருடனை அழைத்து வந்து அதே கடைக்காரரிடம் மறைவான இடத்துக்கு சென்று அதிகமான நகைகளை பெற்று கொள்கின்றனர். இதுபோல் தஞ்சையில் மட்டும் கடந்த சில வாரங்களில் 100 பவுன் நகைகளை பெரம்பலூர், புதுக்கோட்டை, மன்னார்குடி, திருவண்ணாமலை போன்ற வெளிமாவட்ட போலீசார் பறித்து சென்றுள்ளனர். இதுபோன்ற போலீசாரின் செயலால் தஞ்சை நகைக்கடை, அடகுக்கடை காரர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதேபோல் சில நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் திருடனை அழைத்து வந்து கடைக்காரரின் மகனை போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் போலீசார், திருட்டு நகையை வாங்காதவரின் கடைக்கு வந்ததை அறிந்த மற்ற நகைக்கடை காரர்கள், போலீசார் அழைத்து சென்றவரை மீண்டும் கடையில் விடாவிட்டால் போராட்டம் தொடரும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் பயந்து கொண்டு மீண்டும் அதே கடையில் நகைக்கடை காரர் மகனை விட்டு விட்டு சென்று விட்டனர். வெளிமாவட்ட போலீசாரால் நகைக்கடை காரர்களுக்கு இருதய நோயும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையால், நகை திருடும் கும்பலுக்கும், போலீசாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

எனவே நகைக்கடை காரர்களையும், அடகு கடைகாரர்களையும் மிரட்டி நகைகளை பறிக்கும் வெளிமாவட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகை மற்றும் அடகு கடைகாரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பின்னர் தஞ்சை கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 5,462 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. இதில் 589 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், இந்த ஊராட்சிகளில் உள்ள 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன

Tags : owners ,
× RELATED மயிலாடுதுறையில் சாலையில் சுற்றி...