×

செங்குணம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர், டிச. 10: பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செங்குணம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் செங்குணம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான(பொ) மலர்விழி உத்தரவின்பேரில் நடந்த முகாமுக்கு பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமை வகித்தார்.

முகாமில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுடைய குறைகளை கேட்டறிந்த மக்கள் நீதிமன்ற தலைவர், பல்வேறு சட்டங்களை எடுத்துரைத்தார். அதில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளை இலவசமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பெற முடியும். கிராம மக்கள் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் மூலம் தங்களை மேம்படுத்தி வறுமையை ஒழிக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களில் கலந்து கொண்டு சட்ட அறிவை பெற்று மேன்மையடைய வேண்டும் என்றார். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.

Tags : Legal Awareness Camp ,Chengunam Village ,
× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்