×

ஊட்டி கேர்ன்ஹில் பயிற்சி மையத்தில் விலங்குகள், பறவைகளின் ஒலி எழுப்பும் கருவி

ஊட்டி, டிச. 10: ஊட்டி கேர்ன்ஹில் பகுதியில் உள்ள வனத்துறை விளக்க பயிற்சி மையத்தில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகளை எழுப்பும் கருவி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அருகே தெற்கு வனக்ேகாட்டத்தின் சார்பில் கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு விலங்குகளின் பொம்மைகள், ஓவியங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொங்கும் பாலம், பழங்குடியின மக்களின் சிலைகள் ஆகியன சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்குச் செல்கின்றனர். தற்போது இங்குள்ள விளக்க பயிற்சி மையத்தில் புதிதாக ஒருகருவி அமைக்கப்பட்டுள்ளது.   இந்த கருவி ஒரு சிறு சிறு ஒளித்திரைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கருவியில் உள்ள பட்டனை அழுத்தினால், ஒளித்திரையில் தோன்றும் விலங்கு அல்லது பறவை உண்மையாக சத்தமிடுவது போல் ஒலி எழுப்பப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை அதிகம் கவர்ந்து வருகிறது. சில விலங்குகள் மற்றும் பறவைகளை நாம் கண்ட போதிலும், அவைகள் எழுப்பும் சப்தம் நமக்கு தெரியாது. ஆனால், இந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ள கருவி மூலம் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் எழுப்பும் ஒலிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Tags : Ooty Cairnhill Training Center ,
× RELATED ஊட்டியில் 2 மணி நேரம் மழை கொட்டி...