×

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், டிச. 5: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஏடி காலனியில் 17 தலித் அப்பாவி மக்கள் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து உயிரழந்ததை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்ட் காந்தி சிலை முன் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணக்குமார், மாவட்ட பொருளாளர் கலையரசன், சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல், உதயகுமார் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வீர.செங்கோலன், மண்டல செயலாளர் கிட்டு, மாநில துணை செயலாளர் ராசித் அலி கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏடி காலனியில் வசிக்கும் 17 தலித் மக்கள் மீது தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் நிதி மற்றும் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 17 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சிவசுப்பிரமணியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அறவழியில் நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்த நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை எந்தவித நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், வெற்றியழகன், கதிரவன், நந்தன், இளமாறன், நகர செயலாளர் தங்க.சண்முகசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் கதிர்வாணன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Liberation leopard demonstration ,death ,Mettupalayam ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...