×

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் நாசம் நிவாரணம் கோரி வன அதிகாரிகளை முற்றுகை

உடுமலை,  டிச. 4:  உடுமலை அருகே சர்க்கார்புதூர் கிராமத்தில்,  விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி  வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பன்றிகளின் அட்டகாசம் தொடர்கிறது.  சுப்ரமணி என்பவரது தோட்டத்தில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்களை  பன்றிகள் சேதப்படுத்தியுள்ளது. காட்டுபன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க பலமுறை புகார்  தெரிவித்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இதுபற்றிய செய்தி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து, நேற்று வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை  வனச்சரகர் தனபாலன், வனவர் தங்கபாண்டியன் மற்றும் வனப்பாதுகாவலர்கள்,  வனக்காவலர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள் என 15க்கும் மேற்பட்டோர்  சர்க்கார்புதூர் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.  

இந்நிலையில், வனத்துறையினர் வந்ததும் அவர்களை  விவசாயிகள் முற்றுகையிட்டனர். ‘பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  பலமுறை கூறியும் பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது தாமதமாக  வந்துள்ளீர்கள். பன்றிகளை கொல்லவும் அனுமதி மறுக்கிறீர்கள். இதனால்  பயிர்கள் சேதமாகி எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய நிவாரணம்  வழங்க வேண்டும். பன்றிகளை விரட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’  என்றனர்.

Tags : Wildlife officials ,forest officials ,
× RELATED நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை;...