×

நாராயணபுரம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி முடக்கம்

திருவள்ளூர், டிச. 4: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நாராயணபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை முழுமை பெறாத நிலையில், ஷட்டர்கள் திறந்தே கிடப்பதால் மழைநீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் நாராயணபுரம் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதில், ஷட்டர் பணிகள் முடிவடையாத நிலையில் திறந்தே உள்ளது. இந்நிலையில், தற்போது பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இந்த மழைநீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது. இதனால், இப்பகுதியில் மழைநீரை சேமிக்க இயலவில்லை. மேலும், மழைநீரை தடுப்பணியில் சேமித்தால், சுற்றுப்புற கிராம விவசாயிகள் பயன் அடைவர். பூண்டி ஏரி நிரம்பினால், இந்த மழைநீரும் சேர்ந்து வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நாராயணபுரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில், தண்ணீரை சேமிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தடுப்பணையில் மழைநீர் தேங்கினால், விவசாயத்திற்கும், கிராம மக்களின் குடிநீர் தேவைகளுக்கும் பயன்படும். தற்போது அது வீணாகி வெளியேறி கொண்டிருப்பதால், நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதை தடுக்கும் வகையில் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

Tags : Work blocking ,area ,Narayanapuram ,Kosasthalai ,
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை