×

கேங்மேன் பதவியை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

திருப்பூர்,டிச.3: மின்சார வாரியத்தில் கேங்மேன் பதவியை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர திருப்பூரில் நடைபெற்ற தொமுச ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தின் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொமுச பொதுசெயலாளர் ரங்கசாமி மாவட்ட மோட்டார் தொமுச செயலாளர் துரை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  மின்வாரியத்தில் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவியை உடனடியாக ரத்து செய்யகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நீதிமன்ற ஆணைப்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தொமுச பேரவையின் பொன்விழா ஆண்டு மாநாடு மற்றும் பேரணி நிகழ்ச்சிகள் திருப்பூரில் நடைபெற உள்ளதால் அந்த மாநாடு மற்றும் பேரணியில் அனைவரும் சிறப்பாக கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ராஜப்பன், நித்தியானந்தம், பழனிசாமி, ராஜ்மோகன், வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Gangman ,resignation ,Supreme Court ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...