×

மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் பலி உயிரிழந்தோர் உடலுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அஞ்சலி

கோவை டிச, 3 :  கோவை மேட்டுப்பாளையம் அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் அஞ்சலி செலுத்தினார்.  மேட்டுப்பாளையத்தில் நேற்று கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் நகராட்சி நடூர் கிராமம் ஆதி திராவிடர் காலனியில் தனியார் இடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்கண்காணிப்பாளர், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் வருவாய்துறையினர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். மேலும், தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்திரவிட்டார்.இந்த சம்பவத்தால் உயிரிழ்ந்தவர்களின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம்நகராட்சிக்குட்பட்ட நந்தவனத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறைஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்.

Tags : SB Dissanayake ,death ,Velumani ,Mettupalayam Tribute ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...