×

பழவேற்காடு கடற்கரையில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, டிச. 1: பழவேற்காடு கடற்கரையில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ெசய்தனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலும் ஏரியும் இணையும் முகத்துவார பகுதியாகும். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக ஆந்திரா, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து  நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தினந்தோறும் சமூகவிரோதிகள் அப்பகுதியில் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்கள், மிஞ்சிய உணவு பண்டங்கள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வீசி எறிகின்றனர்.  அதுமட்டுமின்றி கஞ்சா, பிற போதை வஸ்துகளை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதும் வழக்கமாகி வருகிறது.   மேலும், மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள பல்புகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருளடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடற்கரைக்குவர அஞ்சுகின்றனர். இந்நிலையில் இயற்கை அழகை கண்டு ரசிக்க பழவேற்காடு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும்,  கடற்கரையில் வைத்து மது அருந்துவை தடுக்கவும் வலியுறுத்தி, “கடற்கரையில் குடிக்காதே” எனும் வடிவத்தில் கடற்கரையில் காலி மது பாட்டில்களை அமைத்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலாபயணிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், இரவு நேரங்களில் கடற்கரையில் ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Youth protest ,beach ,Pulicat ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை