×

புதுகை மாவட்ட திமுக செயலாளர் இல்ல திருமண விழா மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைக்கிறார்

புதுக்கோட்டை, டிச.1: புதுக்கோட்டையில் இன்று (1ம் தேதி) எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் மகள் திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். முன்னாள் தலைமை அரசு கொறடாவும், முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளருமான பெரியண்ணனின் பேத்தியும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பெரியண்ணன்அரசு-சுஜாதா ஆகியோரின் மூத்த மகள் டாக்டர் அபிநயா, தேவக்கோட்டை முத்து-தேவி தம்பதி மகன் டாக்டர் பிரபு ஆகியோரின் திருமணம் இன்று (1ம் தேதி) காலை 9.30 மணியளவில் புதுக்கோட்டை மாலையீட்டில் ஏடிஆர். மண்டபம் அருகில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது.

திருமணத்தை சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். கட்சியினரின் வரவேற்பை அடுத்து சங்கம் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். அதை தொடர்ந்து இன்று காலை காரில் புதுக்கோட்டைக்கு வருகை தந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags : MK Stalin ,Pudukkai District ,DMK ,wedding ceremony ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...